கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தால் பள்ளியில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்த 38 பள்ளி மாணவர்களை மீட்பு குழுவினர் படகு மூலம் மீட்டனர். அம்ரலி மாவட்டம் ராஜுலா தாலூகாவிலுள்ள கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கி தவித்த 22 பேரை கடலோர காவல் படையினர் மீட்டனர். பாவ் நகரில் காட்டாறாக பாய்ந்த வெள்ளத்தில் சாலையின் இரும்பு தடுப்பு தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. குஜராத் மாநிலம் அம்ரேலியில் அரசு பேருந்து ஒன்று பள்ளத்தில் சிக்கியது. அம்ரேலியிலிருந்து கரியாதார் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து போரிக்காடா என்ற கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக பேருந்தில் பயணித்த 20 பேறும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பாவ் நகரில் வெளுத்து வாங்கிய மழையால் அணை நிரம்பி வெளியேற்றப்பட்ட உபரி நீர் காட்டாறாக பாய்ந்தது. அம்ரேலி மாவட்டம் ரெஜுலாவில் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் திரண்டது. இதனால் சுற்றுவட்டார கிராமங்கள் இல்லத்தில் தத்தளித்தன. அம்ரேலி மாவட்டம் சாவர்குட்லா அருகே கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் தோபா கிராமமே ஆறுகளாக மாறின. வீதிகளில் ஆறு காட்டாறாக பாய்ந்தது. போடாட் மாவட்டத்தில் கோடி தீர்த்த கனமழையால் உடாவலி ஆற்றில் வெள்ளம் பாய்ந்தது. ஆற்றில் கார் ஒன்று அடித்து சென்றது.
The post குஜராத்தில் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவமழை: மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கரைபுரண்டோடும் காட்டற்றுவெள்ளம் appeared first on Dinakaran.
