பொடாட் மாவட்டத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய ஆற்றில் ஒரு கார் அடித்து செல்லப்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் மாயமாகி உள்ளனர் என தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கனமழை, வெள்ளம் காரணமாக, கடந்த 48 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னெச்சரிக்கையாக, குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட 25 மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
The post குஜராத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை; 22 பேர் பலி appeared first on Dinakaran.
