மீண்டும் இறங்குமுகத்தில் தங்கம் விலை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,440க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாள்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வந்த நிலையில், வார இறுதிநாளான இன்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது. உலக அளவில் தங்கம் நுகர்வு அதிகமாக உள்ள நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. ஆபரணங்கள் முதல் முதலீடு வரை தங்கமானது இங்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,785க்கு விற்பனையானது. அத்துடன் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.54,280க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,600க்கு விற்பனையானது. கிராமுக்கு தங்கம் விலையானது ரூ.40 குறைந்து ரூ.6, 825க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து கிராம் ரூ.6,805க்கும் விற்பனையாகிறது. அத்துடன் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.54,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post மீண்டும் இறங்குமுகத்தில் தங்கம் விலை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,440க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: