ஜெமினி மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் உரசி சிக்கிக்கொண்ட அரசுப்பேருந்தால் போக்குவரத்து பாதிப்பு

சென்னை: சென்னை ஜெமினி மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் உரசி அரசு பேருந்து சிக்கிக்கொண்டதால் அங்கு சிறுது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஐஸ்ஹவுஸ் பேருந்து நிலையத்திலிருந்து வடபழனி நோக்கி சென்று கொண்டிருந்த தடன் எண் 25ஜி பேருந்து அண்ணாசாலை வழியாக ஜெமினி மேம்பாலம் மீது எறியுள்ளது. அப்போது அங்கிருந்து நுங்கம்பாக்கம் வழியாக சாலையில் திரும்பும்போது மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் உரசி சிக்கொண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் மேம்பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்து பேருந்தை அங்கிருந்து அகற்றினர். பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மேம்பால சுவரின் மீது மோதியபோது பேருந்தில் பயணித்த பயணிகள் அலறியடித்து வெளியேறினர்.

மேம்பால சுற்றில் சிக்கிய அரசுப்பேருந்து சுமார் ஒரு அரைமணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு அதிலிருந்த பயணிகள் அனைவரும் வடபழனி நோக்கி செல்லக்கூடிய பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post ஜெமினி மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் உரசி சிக்கிக்கொண்ட அரசுப்பேருந்தால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: