சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே காளக்கண்மாய் பகுதியில் கடந்த 17ம் தேதி காரில் கஞ்சா கடத்தி வந்த ரவுடி அகிலன், போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார். அவரை இன்ஸ்பெக்டர் ஆடிவேல்,காலில் சுட்டு பிடித்தார். அப்போது காரில் இருந்த மேலும் இருவர் தப்பி ஓடினர். அவர்களை தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் காளையார்கோவில் அருகே மறவமங்கலம் பெரியகண்மாய் பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற நிலையில், 5 கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருப்புவனத்தை சேர்ந்த நிதிஷ்குமார்(23) கால் முறிந்தது. மற்றொரு ரவுடி கண்ணன்(21) பிடிபட்டார். இருவரையும் போலீசார் கைது செய்தனர். நிதிஷ்குமாரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
The post கஞ்சா கடத்தி தப்பிய ரவுடியின் கால் முறிந்தது appeared first on Dinakaran.