சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர், விடுதலைப் போராட்ட வீரர் ராதாகிருஷ்ணன் (102), அம்பத்தூர் நியூ செஞ்சுரி காலனியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகரில் வணிக குடும்பத்தில் பிறந்தவர். பள்ளியில் பயின்று வந்த காலத்தில் தீவிரமடைந்த விடுதலைப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு ஈடுபட தொடங்கியவர். வரலாற்று பதிவுகளின் களஞ்சியமாக திகழ்ந்த விடுதலை போராட்ட வீரர் ராதகிருஷ்ணன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
The post விடுதலை போராட்ட வீரர் ராதாகிருஷ்ணன் மறைவுக்கு முத்தரசன் இரங்கல் appeared first on Dinakaran.