×

தமிழ்நாடு முழுவதும் எஸ்டிஏடி சார்பில் இலவச விளையாட்டு பயிற்சி முகாம்


சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைம் (எஸ்டிஏடி) விளையாட்டு அரங்கங்கள், வளாகங்களில் மாநிலம் முழுவதும் கோடைக்கால பயிற்சி முகாம்கள் நடக்கின்றன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் என அந்தந்த மாவட்டங்களில் உள்ள எஸ்டிஏடி மையங்களில் உள்ள விளையாட்டுகளை முதல் முறையாக இலவசமாக பயிற்சி அளிக்க எஸ்டிஏடி உத்தரவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, வேளச்சேரி நீச்சல் குள வளாகத்தில் ஜிம்னாஸ்டிக்ஸ், இறகுப் பந்து பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. மேலும், நீச்சல் தெரிந்தவர்களுக்கு ‘டைவிங்’ பயிற்சி முகாமும் நடத்தப்படும்.

இந்த முகாம் இன்று முதல் மே 15ம் தேதி வரை 21நாட்கள் நடைபெற உள்ளது. முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் 044-22354381 என்ற அலுவலக எண்ணை தொடர்புக் கொண்டு பதிவு செய்யலாம். மேலும் 9444280951 (ஜிம்னாஸ்டிக்ஸ்), 9840252292 (டைவிங்), 7904977837 (இறகுபந்து) என்ற செல்பேசி எண்களை தொடர்புகொண்டும் பதியலாம். பயிற்சி தொடங்கிய பிறகும் சேர்க்கை நடைபெறும். மற்ற மாவட்டங்களில் ஆர்வமுள்ளவர்கள் அங்குள்ள எஸ்டிஏடி அலுவலகங்களை, அதிகாரிகளை தொடர்புக் கொண்டு இலவச பயிற்சியில் சேரலாம். மேலும் தகவலறிய, அதிகாரிகளை தொடர்புக் கொள்ள www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரி அல்லது 044 – 25611522.

கைப்பந்து பயிற்சி
சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் கோடைக்கால பயிற்சி முகாம் சென்னை எழும்பூரில் உள்ள ஹாக்கி வளாகத்தில் ஏப்.28ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதில் 12, 13வயது சிறுவர்கள், சிறுமிகள் பங்கேற்கலாம். அதேபோல் நெல்லை நண்பர்கள் சங்கம் சார்பில் 17வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கான 41வது கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் இதே வளாகத்தில் நடக்கும். மேலும் விவரங்கள் அறிய தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் நிர்வாகிகள் பழனியப்பன் (9444842628), கேசவன் (9841816778), ஜெகதீசன் (9382207524) ஆகியோரில் ஒருவரை தொடர்பு கொள்ள வேண்டும்.

The post தமிழ்நாடு முழுவதும் எஸ்டிஏடி சார்பில் இலவச விளையாட்டு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : STAD ,Tamil Nadu ,Chennai ,Tamil Nadu Sports Development Authority ,STDA ,Tiruvallur ,Kanchipuram ,Vellore ,
× RELATED வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்: கட்சி தலைவர்கள் கண்டனம்