வெளி மாநிலங்களுக்கு செல்லும் தொழில் நிறுவனங்கள் ஜவுளித்துறையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி அறிக்கை

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக ஜவுளி கூட்டமைப்பு தனது விரிவாக்கப் பணிகளை வெளி மாநிலங்களுக்கு மாற்றுவதற்கு ஒருசில முக்கிய காரணங்கள் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தொழில் நிறுவனங்களுக்கு 3 முறை கடுமையாக மின் கட்டணங்களை உயர்த்தியதுடன், பீக் ஹவர் கட்டண உயர்வு, நிலை கட்டணம் உயர்வு. 365 கிலோ பருத்தி பேலின் விலை 50 சதவீதத்திற்கும் கீழே குறைந்த போதும், நூல் விலையில் ஸ்திரமற்ற தன்மை நிலவிய போதும், போதிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

எனவே தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்லும் தமிழக தொழில் நிறுவனங்கள், இங்கேயே தொழில் தொடங்குவதற்கு தேவையான சூழ்நிலையை உருவாக்குவதோடு, தென்னிந்தியாவின் மான்செஸ்டர் `கோயம்புத்தூர்’ என்ற பெயரை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் வகையில் டெக்ஸ்டைல் துறையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post வெளி மாநிலங்களுக்கு செல்லும் தொழில் நிறுவனங்கள் ஜவுளித்துறையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: