முதல், சிறப்பு, தேர்வுநிலை நகராட்சி மன்றங்கள் தேர்வு: கே.என்.நேரு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை மாநகராட்சி உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் தரத்திற்கு ஏற்ப பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சில ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தவும் கோரிக்கை வருகிறது. இந்நிலையில், இரண்டாம் நிலை நகராட்சி மன்றங்களை முதல்நிலை நகராட்சி மன்றங்களாக அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். இது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு வெளியிட்டுள்ள அரசாணை: திருப்பூர் மாவட்டம்-காங்கேயம்,திருமுருகன்பூண்டி,நாகப்பட்டினம் மாவட்டம்-வேதாரண்யம்,ராமநாதபுரம் மாவட்டம்-ராமேஸ்வரம்,அரியலூர் மாவட்டம்-ஜெயங்கொண்டம் ஆகிய இரண்டாம் நிலை நகராட்சி மன்றங்களை முதல் நிலை நகராட்சி மன்றங்களாகவும், கள்ளக்குறிச்சி மாவட்டம்-கள்ளக்குறிச்சி, திருப்பூர் மாவட்டம்-தாராபுரம், திருவாரூர் மாவட்டம்-திருவாரூர்,தேனி மாவட்டம்-போடிநாயக்கனூர்,தென்காசி மாவட்டம்-தென்காசி ஆகிய முதல்நிலை நகராட்சி மன்றங்களை தேர்வுநிலை நகராட்சி மன்றங்களாகவும்,விழுப்புரம் மாவட்டம்-விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டம்-மயிலாடுதுறை, தேனி மாவட்டம்-தேனி-அல்லிநகரம் ஆகிய தேர்வுநிலை நகராட்சி மன்றங்களை சிறப்பு நிலை நகராட்சி மன்றங்களாகவும்,பெரம்பலூர் மாவட்டம்-பெரம்பலூர் இரண்டாம் நிலை நகராட்சி மன்றத்தினை தேர்வு நிலை நகராட்சி மன்றமாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

The post முதல், சிறப்பு, தேர்வுநிலை நகராட்சி மன்றங்கள் தேர்வு: கே.என்.நேரு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: