கோயம்பேடு மார்க்கெட்டில் பெண் அதிகாரி நேரில் ஆய்வு

அண்ணாநகர் : தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் மழைநீர் தேங்கியது. இந்த நிலையில், கோயம்பேடு அங்காடி நிர்வாக அலுவலர் சாந்தி தலைமையில் அதிகாரிகள் நேற்று காலை கோயம்பேடு காய்கறி, பூ, பழங்கள் மற்றும் உணவுதானியம் ஆகிய மார்க்கெட்டில் ஆய்வு செய்து மழைநீர் தேங்கியுள்ள இடத்தை சுத்தம் செய்யும் படியும் ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, தேங்கிய மழைநீரை உடனடியாக ஊழியர்கள் அகற்றினர்.

வியாபாரிகள் கூறும்போதும், ‘‘நேற்று முன்தினம் இரவு முதல் விடியவிடிய கனமழை பெய்துவருவதால் கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் சுத்தமாக இல்லை. ஆங்காங்கே குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பொருட்களை வாங்கவரும் மக்கள் அவதிப்படுகின்றனர். காய்கறிகள், பழங்கள், பூக்கள் வியாபாரம் மந்தமாக காணப்பட்டது. தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அனைத்து பொருட்கள் வரத்தும் குறைந்துள்ளது. வியாபாரிகள், பொதுமக்கள் வருகை குறைந்துள்ளதால் காய்கறிகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலைமை உள்ளது. புகார் செய்தவுடன் அங்காடி நிர்வாக அலுவலர் சாந்தி அதிரடி ஆய்வு செய்து மார்க்கெட் முழுவதும் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றியது மகிழ்ச்சி அளித்தது’’ என்றனர்.

 

The post கோயம்பேடு மார்க்கெட்டில் பெண் அதிகாரி நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: