ராஜஸ்தானில் இருந்து ஏற்றுமதி ரூ.77,771 கோடியாக உயர்வு

சென்னை: ராஜஸ்தான் அரசின் ஏற்றுமதி மதிப்பு கடந்த ஆறு நிதியாண்டுகளில் சுமார் ரூ.31 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.77,771 கோடியாக உயர்த்தி ராஜஸ்தான் அரசு சாதனை படைத்துள்ளது. ராஜஸ்தான் அரசு ‘‘ஏற்றுமதி ஊக்குவிப்பு செயல்முறை மற்றும் ஆவணப்படுத்தல் பயிற்சி திட்டம்’’ என்ற திட்டத்தை 2012ம் ஆண்டு தொடங்கியது. 2012ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், ஏற்றுமதித் துறையில் தொழில் செய்ய விரும்பும் தொழில்முனைவோருக்கு ஏற்றுமதி செயல்முறை, ஆவணங்கள் மற்றும் உலகச் சந்தைகள் பற்றிய தகவல்கள் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்படுகின்றன. இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில், 10,000க்கும் மேற்பட்ட புதிய ஏற்றுமதியாளர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு, சர்வதேச அளவிலான ஏற்றுமதியாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதால் 2017-18ம் ஆண்டு ரூ.46,476 கோடியாக இருந்த ராஜஸ்தான் அரசின் ஏற்றுமதி மதிப்பு கடந்த நிதியாண்டில் ரூ.77,771 கோடியாக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ராஜஸ்தான் அரசு வெளியிட்டு உள்ள புள்ளிவிவரத்தில் 2018-19ம் ஆண்டு ஏற்றுமதி மதிப்பு ரூ.51,178.41 கோடியாகவும், 2019-20ல் ரூ.49,946.10 கோடியாகவும், 2020-21ல் ரூ.52,764.31 கோடியாகவும், 2021-22ல் ரூ.71,999 கோடியாகவும், 2022-23ல் ரூ.77,771.37 கோடியாகவும் தொடர்ந்து ஏற்றுமதி மதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் ராஜஸ்தான் அரசின் ‘‘ஏற்றுமதி ஊக்குவிப்பு செயல்முறை மற்றும் ஆவணப்படுத்தல் பயிற்சி திட்டம்’’ க்டந்த மார்ச் 31ம் தேதி உடன் முடிவடைந்தது. இத்திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் சாதனைகளை கருத்தில் கொண்டு, இத்திட்டத்தினை 2028ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி காலத்தை மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டித்து ராஜஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

The post ராஜஸ்தானில் இருந்து ஏற்றுமதி ரூ.77,771 கோடியாக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: