கொரோனா தடுப்பு பணிக்கு மருத்துவர், செவிலியர் பணிக்கு நேர்காணல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ள 150 மருத்துவ அலுவலர்கள், 150 செவிலியர்கள் ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படித்து, மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்றவர்களுக்கு மாதம் ரூ.60 ஆயிரமும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் படித்து நர்சிங் கவுன்சிலிங்கில் பதிவு செய்த டிப்ளமோ நர்சிங் முடித்தவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படும். இதற்கான நேர்கானல் நேற்று ரிப்பன் மாளிகையில் நடந்தது. இதில், 200க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 2வது நாளாக இன்றும் நேர்காணல் நடைபெறுகிறது. அதன்பிறகு தேர்வானவர்களுக்கு பணியில் சேருவதற்கு ஆணை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: