போலீஸ் காவலில் இருக்கும் பொருளாதார குற்றவாளிகளுக்கு கைவிலங்கிட கூடாது: நாடாளுமன்ற குழு பரிந்துரை

புதுடெல்லி: போலீஸ் காவலில் எடுக்கப்படும் பொருளாதார குற்றவாளிகளுக்கு கைவிலங்கிட கூடாது என்று நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய தண்டனைச் சட்டம் 1898, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1860 மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் 1972 ஆகியவற்றுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சக்ஷயா ஆகிய சட்டங்களை கொண்டு வருவது தொடர்பான மசோதாவை கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தினார். இவை நடைமுறைக்கு வந்தால் பழைய சட்டங்கள் ரத்து செய்யப்படும்.

இந்த மசோதாக்கள் மறுஆய்வுக்காக உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. இது தொடர்பான வரைவு அறிக்கைகளை தயாரிக்க கடந்த 27ம் தேதி நாடாளுமன்ற நிலைக்குழு கூடியது. பின்னர், நாடாளுமன்றக் குழுவின் 3 வரைவு அறிக்கைகள் கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டன. இந்நிலையில்,பொருளாதார குற்றங்களுக்காக கைது செய்யப்படுகிறவர்களுக்கு கைவிலங்கிட கூடாது. அவர்களை கற்பழிப்பு மற்றும் கொலை போன்ற கொடூரமான குற்றங்களுக்காக கைது செய்யப்படுபவர்களுடன் கைவிலங்கிடக்கூடாது என்று நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.

பாஜ. எம்பி பிரிஜ் லால் தலைமையிலான உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்ட முதல் 15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலில் வைக்கும் விவகாரத்தில் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவில் (பிஎன்எஸ்எஸ்) இந்த மாற்றங்களை பரிந்துரைத்தது.பி.என்.எஸ்.எஸ் இன் பிரிவு 43 (3)ல் சுட்டி காட்டப்பட்டுள்ளபடி, பொருளாதார குற்றங்கள் என்ற சொல் பரந்த அளவிலான குற்றங்களை உள்ளடக்கியது. எனவே, இந்த வகையின் கீழ் வரும் அனைத்து வழக்குகளிலும் கைவிலங்கு பயன்படுத்த கூடாது. எனவே, பொருளாதாரக் குற்றங்கள் என்ற வார்த்தைகளை விதியிலிருந்து நீக்குவதற்காக பிரிவு 43 (3) பொருத்தமான முறையில் திருத்தப்பட வேண்டும் என்று குழு பரிந்துரைக்கிறது.

The post போலீஸ் காவலில் இருக்கும் பொருளாதார குற்றவாளிகளுக்கு கைவிலங்கிட கூடாது: நாடாளுமன்ற குழு பரிந்துரை appeared first on Dinakaran.

Related Stories: