ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி பெண்களுக்கான இ-சேவை மையம்: துணை மேயர் துவக்கி வைத்தார்

 

காஞ்சிபுரம்: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் ராகுல்காந்தியின் 53வது பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளும், அன்னதானமும் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், நேற்று காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் ஏற்பாட்டில், மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமையில், காந்தி சாலையில் உள்ள காமராஜர் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பின் 300க்கும் மேற்பட்டோருக்கு கேசரியுடன் சிக்கன் பிரியாணி வழங்கி கொண்டாடினர்.

இதனைதொடர்ந்து, தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் டிஜிட்டல் சேலைகள் துறை காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டு இ-சேவை மையத்தினை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில், மாநகர தலைவர் நாதன், காஞ்சிபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் யோகானந்தம், காங்கிரஸ் நிர்வாகிகள் அன்பு, கணேஷ், பார்த்தசாரதி, யுதா உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து கல்பாக்கத்தில் ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி, புதுப்பட்டினம் பேருந்து நிலையத்தில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், மாநில நிர்வாகி சி.ஆர்.பெருமாள் தலைமை தாங்கி, 100 பேருக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கதிர் மோகன் ராசு, அருள், தொகுதி தலைவர் யாசர், நிர்வாகிகள் அலாவுதீன், சாமி கண்ணா, கிருஷ்ணா, பால்ராஜ், விட்டலாபுரம் ஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி பெண்களுக்கான இ-சேவை மையம்: துணை மேயர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: