உள்நாட்டு பரிவர்த்தனை இந்திய ரூபாய் நோட்டை பயன்படுத்த முடியாது: இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

கொழும்பு: இலங்கையில் 2022 ஆகஸ்ட் மாதம் இந்திய ரூபாய் வெளிநாட்டு நாணயமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று அறிவித்து இருந்தார். இதனால் இலங்கையில் வசிப்பவர்களும் அங்கு பொருட்கள் வாங்க, விற்க இந்திய ரூபாய் பயன்படுத்தலாம் என்ற தகவல் பரவியது. இதை இலங்கை மத்திய வங்கி மறுத்து உள்ளது. இதுபற்றி நேற்று இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய ரூபாய் ஒரு வெளிநாட்டு நாணயமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், உள்நாட்டு வர்த்தகத்திற்கு, வியாபாரத்திற்கு இலங்கையில் இது சட்டப்பூர்வ அனுமதி இல்லை. எனவே இலங்கையில் வசிப்பவர்கள் அல்லது வர்த்தகம் செய்பவர்கள் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பரிவர்த்தனையும் இலங்கை ரூபாயில் இருக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளது.

The post உள்நாட்டு பரிவர்த்தனை இந்திய ரூபாய் நோட்டை பயன்படுத்த முடியாது: இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: