திருக்கழுக்குன்றத்தில் திமுக வேட்பாளர் பிரசாரம்

திருக்கழுக்குன்றம்: காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் செல்வம், திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றியம் வாயலூர், வசுவ சமுத்திரம், ஆயப்பாக்கம், நல்லாத்தூர், நெரும்பூர், சூராடி மங்கலம், அமிஞ்சிகரை, வீராபுரம், பெரிய காட்டுப்பாக்கம், நடுவக்கரை, பெரும்பேடு, கிளாப்பாக்கம், வழுவதூர், வல்லிபுரம், விளாகம், இரும்புலிச்சேரி, எடையாத்தூர், பாண்டூர், விட்டிலாபுரம், வெங்கப்பாக்கம், புதுப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் அடங்கிய கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது, திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய செயலாளர் எடையாத்தூர் சரவணன், திருக்கழுக்குன்றம் ஒன்றிய சேர்மன் ஆர்.டி.அரசு, மாவட்ட கவுன்சிலர்கள் கலாவதி நாகமுத்து, ரமேஷ், ஒன்றிய துணை செயலாளர்கள் ஆயப்பாக்கம் பாஸ்கர், புதுப்பட்டினம் தாமோதரன், ஒன்றிய பொருளாளர் சகாதேவன், மாவட்ட பிரதிநிதி கயல் மாரிமுத்து, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மதன் மற்றும் விசிக மாவட்ட செயலாளர் கனல்விழி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

The post திருக்கழுக்குன்றத்தில் திமுக வேட்பாளர் பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: