விம்பிள்டன் டென்னிஸ்; 10வது முறையாக இறுதி போட்டிக்கு ஜோகோவிச் தகுதி: அல்காரசுடன் நாளை பலப்பரீட்சை


லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையரில் நேற்றிரவு நடந்த 2வது அரையிறுதி போட்டியில், 2ம் நிலை வீரரரான செர்பியாவின் 37 வயதான நோவக் ஜோகோவிச், இத்தாலியின் 22 வயதான லோரென்சோ முசெட்டி மோதினர். இதில் ஜோகோவிச் 6-4, 7-6, 6-4 ன்ற செட் கணக்கில் வெற்றிபெற்று பைனலுக்குள் நுழைந்தார். 10 முறையாக அவர் விம்பிள்டன் பைனலுக்கு தகுதி பெற்றுள்ளார். இதற்கு முன் ஆடிய 9 பைனலில் 7ல் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடந்த மற்றொரு அரையிறுதியில், 3ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவ்வை வீழ்த்தினார்.

நாளை நடைபெறும் பைனலில் ஜோகோவிச்-அல்காரஸ் மோதுகின்றனர். கடந்த ஆண்டும் இவர்கள் இருவரும் தான் பைனலில் மோதிய நிலையில் அல்காரஸ் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. அதற்கு பழிதீர்த்து ஜோகோவிச் 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மகளிர் ஒற்றையரில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின், செக் குடியரசின் கிரெஜ்கோவா மோதுகின்றனர். இதில் வெற்றிபெறுபவருக்கு கோப்பையுடன் ரூ. 29.26 கோடியும், ரன்னருக்கு ரூ.15.17 கோடியும் பரிசு கிடைக்கும்.

The post விம்பிள்டன் டென்னிஸ்; 10வது முறையாக இறுதி போட்டிக்கு ஜோகோவிச் தகுதி: அல்காரசுடன் நாளை பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Related Stories: