திண்டுக்கல் காந்தி சந்தை வியாபாரிக்கு குவியும் பாராட்டு: ஒரு கிலோ தக்காளியை ரூ.60-க்கு விற்கும் வியாபாரி

திண்டுக்கல்: திண்டுக்கல் சந்தையில் வியாபாரி ஒருவர் பொதுமக்களுக்கு ஒரு கிலோ தக்காளியை ரூ.60-க்கு விற்பனை செய்து வருவது வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ரூ.1 கிலோ தக்காளியை வாங்கி செல்லக்கூட பொதுமக்கள் தயக்கம் காட்டும் நிலை இருக்கிறது. மாற்றப்பகுதிகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.140-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், திண்டுக்கல் காந்தி காய்கறி சந்தையில் வியாபாரி சந்தோஷ் குறைந்த விலைக்கு தக்காளி விற்று வருகிறார். இவர் பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5 டன் தக்காளியை வாங்கி வந்து ஒரு கிலோ தக்காளியை ரூ.60-க்கு விற்பனை செய்கிறார். அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதாலும் ஒருவருக்கு 2 கிலோ தக்காளி மட்டுமே விற்பனை செய்கிறார். மேலும், மற்ற வியாபாரிகளுக்கு இவர் விற்பனை செய்வதில்லை. இவரது பணியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

The post திண்டுக்கல் காந்தி சந்தை வியாபாரிக்கு குவியும் பாராட்டு: ஒரு கிலோ தக்காளியை ரூ.60-க்கு விற்கும் வியாபாரி appeared first on Dinakaran.

Related Stories: