இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி எம்எல்ஏகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜரானார். அப்போது அவர், நீதிமன்ற சம்மனை பெற மறுத்து விட்டதாக கூறியது தவறு. நீதிமன்ற சம்மன் ஏதும் வரவில்லை. நீதிமன்றத்தின் மீது தனக்கு மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் உள்ளதாகவும், இதுசம்பந்தமாக விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதியிடம் தெரிவித்தார். பின்னர், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 26ம் தேதிக்கு நீதிபதி ஜெயவேல் தள்ளிவைத்தார். நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, சென்னையில் இருந்த போதும் சரி, திருநெல்வேலி மாவட்டத்தில் சொந்த கிராமத்தில் இருந்த போதும் தனக்கு எந்த சம்மனும் வரவில்லை. சென்னையில் உள்ள வீட்டில் இருந்த காவலர்களிடம் கடிதங்கள் வந்தால் தெரிவிக்கும்படி கூறியிருந்தேன். ஆனால் சம்மன் எதுவும் வரவில்லை என்று கூறினார்.
The post அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜர்: சம்மனை நிராகரித்ததாக கூறுவது தவறு என நீதிபதியிடம் விளக்கம் appeared first on Dinakaran.