ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா வெப்பாலம்பட்டி அடுத்த பேடப்பட்டியில், நேற்று பகல் 1 மணி அளவில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. இதன் தாக்கம் ஊத்தங்கரை பகுதியிலும் உணரப்பட்டது. இதனால், மாடி வீட்டில் வசிப்பவர்கள் கீழே இறங்கி ஓடி வந்தனர். லேசான நில அதிர்வு ஏற்பட்டதை அவர்கள் உணர்ந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வானிலை மையத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதிக்கு உட்பட்ட பேடப்பட்டியில், 3.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகி உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல் தர்மபுரி மாவட்டம் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகம் உணரப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
The post கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் திடீர் நிலநடுக்கம் மக்கள் அச்சம்: ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு appeared first on Dinakaran.