தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான பிரிட்டிஷ் துணை தூதராக ஹலிமா ஹாலண்ட் நியமனம்

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான பிரிட்டிஷ் துணை தூதராக ஹலிமா ஹாலண்ட் பொறுப்பேற்றுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் பிரிட்டிஷ் துணை தூதரகம் செயல்பட்டு வருகிறது. இதில் துணை தூதராக இருந்து வந்த ஆலிவர் பால்ஹட்செட்டின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான புதிய துணை தூதராக ஹலிமா ஹாலண்ட் பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக ஹாலண்ட் ஈராக், ஆப்கானிஸ்தான், இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களில் காமன்வெல்த் மேம்பாட்டு துணைத் தலைவராக பதவி வகித்தவர்.

இதுதவிர, பயங்கரவாத எதிர்ப்பு துறை தலைவராகவும் இருந்துள்ளார். சென்னை பிரிட்டிஷ் தூதரகத்தின் 27வது துணை தூதராக பொறுப்பேற்றுள்ள ஹாலண்ட் கூறுகையில் ‘‘தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இங்கிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமின்றி, இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான கலாச்சாரம், வணிகம் மற்றும் வர்த்தக உறவை வலுப்படுத்துவேன்’’ என்றார். மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான பிரிட்டிஷ் துணை தூதராக பெண் ஒருவரை நியமித்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

The post தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான பிரிட்டிஷ் துணை தூதராக ஹலிமா ஹாலண்ட் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: