கிரிக்கெட் சங்க முறைகேடு விவகாரம் அசாருதீனிடம் அமலாக்கத்துறை விசாரணை

திருமலை: ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் (எச்.சி.ஏ) அசாரூதின் தலைவராக இருந்தபோது மொத்தம் ரூ.3.8 கோடி மதிப்புள்ள கிரிக்கெட் பந்துகள், உடற்பயிற்சிக் கருவிகள், தீயணைப்பு உபகரணங்கள், நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இந்த முறைகேடுகள் குறித்து உப்பல் காவல் நிலையத்தில் முன்பு பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அசாருதீன் முன்ஜாமீன் பெற்ற நிலையில், கடந்த 3ம் தேதி அசாருதீனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன் அடிப்படையில் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அசாருதீன் நேற்று ஆஜரானார். அப்போது அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

The post கிரிக்கெட் சங்க முறைகேடு விவகாரம் அசாருதீனிடம் அமலாக்கத்துறை விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: