ஊட்டி – தொரையட்டி சாலையில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி

ஊட்டி: ஊட்டியில் இருந்து தொரையட்டி செல்லும் சாலையில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் இங்குள்ள பெரும்பாலான சாலைகள் மலை பாங்கான பகுதிகளிலும் மற்றும் தாழ்வான பள்ளத்தாக்கு பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, இது போன்ற சாலைகளில் மலை பாங்கான பகுதிகளில் மழைக்காலங்களில் மண் சரிவு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுப்பதற்காக நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை ஓரங்களில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான கிராமப்புற பகுதிகளுக்கு செல்லும் சாலை ஓரங்களில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ஊட்டியில் இருந்து தொரையட்டி செல்லும் சாலையில் இரு இடங்களில் தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையோரங்களிலும் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம், மழைக்காலங்களில் சாலை ஓரங்களில் மண் சரிவு ஏற்படுவதையும் தடுப்பு சுவர் இடிந்து விழுவதையும் தடுக்க முடியும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஊட்டி – தொரையட்டி சாலையில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி appeared first on Dinakaran.

Related Stories: