தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கார்கே, ராகுல் ஆலோசனை

புதுடெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று தமிழக காங்கிரஸ் தரப்பில் நடந்த கூட்டத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் அக்கட்சியின் எம்பி, எம்.எல்.ஏக்கள் உட்பட மொத்தம் 24பேர் கலந்து கொண்டனர். அவர்களுடன் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினர். இதையடுத்து கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டியில்,’கூட்டத்தின் போது அனைவரின் கருத்தும் கேட்கப்பட்டது.

திமுக அரசுக்கும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் பாஜவினர் பல தொந்தரவுகளை தருகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தியை அவர் ஆதரிப்பதாகும். அதனை தகர்த்தெறிய வேண்டும். மேலும் 2024 தேர்தலை காங்கிரஸ் கட்சி எப்படி சந்தித்து, எவ்வாறான பிரசாரத்தை செய்ய வேண்டும், சாதனை விளக்கங்கள் என மூன்று மணி நேரம் கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கார்கே, ராகுல் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: