சங்கு கறி தொக்கு

தேவையானவை:

சங்கு கறி – 3
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 3
மஞ்சள் தூள் – 2 தேக்கரண்டி
பட்டை – 1 துண்டு
பிரிஞ்சி இலை, அன்னாசி பூ – 1
மிளகு, சீரகம் – 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவைக்கேற்ப
சோம்பு தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

சங்கை உடைத்து கறியை மட்டும் எடுத்து அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். கறி அலசும்போது சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அலசிக்கொள்ள வேண்டும். பின்னர், கறியை குக்கரில் இட்டு 6-7 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், வெந்த கறியை சிறிய துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் விட்டு காயந்ததும் பட்டை லவங்கம், அன்னாசி பூ சேர்த்து வதக்கவும். பின்னர், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். பின்னர், நறுக்கி வைத்துள்ள சங்குக் கறியை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும். அதில் லேசாக தண்ணீர் தெளித்து மூடி விட வேண்டும். ஒரு 5 நிமிடம் கழித்து திறந்து, நன்கு கிளறி விடவும். கறி மசாலாவுடன் நன்கு கலந்து ஒன்றானதும், மிளகு சீரகத்தூள், சோம்புத்தூள் சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும். இப்போது சுவையான சங்கு கறி தயார்.

The post சங்கு கறி தொக்கு appeared first on Dinakaran.