கணினி துறை மாணவர்களுக்கு சான்றிதழ் பயிலரங்கம்

 

அவிநாசி, ஏப்.23:அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி துறை மாணவர்களுக்கு சான்றிதழ் பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி கணினி துறைத்தலைவர் ஹேமலதா தலைமை தாங்கினார். ஐகியூஏசி ஒருங்கிணைப்பாளர் கீதா, செயலாளர் தமிழ்ச்செல்வி, பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் செல்வதரங்கிணி, உதவி பேராசிரியர் ஜஸ்வர்யா உட்பட பலர் பங்கேற்று பேசினர். கோவை மைட்டி எலக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட்ஸ் நிறுவன தொழில்நுட்பத்தலைவர் செந்தில் சுப்ரமணியம் பயிலரங்கத்தை விளக்கி பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழக நிதி அளிப்பின் மூலம் நடைபெற்ற இந்த பயிலரங்கத்தில் 2ம் ஆண்டு கணினி துறை மாணவ, மாணவியர் பங்கேற்று பயனடைந்தனர்.

The post கணினி துறை மாணவர்களுக்கு சான்றிதழ் பயிலரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: