இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் மறைவு: முத்தரசன் இரங்கல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும், விவசாயிகள் இயக்கத்தின் நாடறிந்த தலைவருமான அதுல் குமார் அஞ்சான் (71) உடல் நலக்குறைவால் உத்தரப்பிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் காலமானார் என்பதை ஆழ்ந்த வேதனையோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

தொழிலாளர் மற்றும் விவசாயிகள் வர்க்க கூட்டணி மூலம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க சமரசம் இல்லாமல் போராடி வந்த களப்போராளியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இழந்து நிற்கிறது. அவரது மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். மேலும், அர்ப்பணி உணர்வோடு, தன்னலமற்ற பொது வாழ்க்கை வாழ்ந்து காட்டிய அதுல் குமார் அஞ்சான் மறைவுக்கு (சிபிஐ) மாநிலக்குழு செங்கொடி தாழ்த்தி செவ்வணக்கம் செலுத்தி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சி தோழர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறது. அதுல் குமார் அஞ்சான் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் கட்சி கொடிகள் மூன்று நாட்கள் அரைக்கம்பத்தில் இறக்கி விடுமாறு கட்சி அமைப்புகளை கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் மறைவு: முத்தரசன் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: