கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி

சென்னை: கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கோரிக்கையை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். அதில்; கிரிக்கெட் மற்றும் விளையாட்டு ஆர்வலராக, எங்கள் 2024 தேர்தல் அறிக்கையில் மற்றுமொரு வாக்குறுதியைச் சேர்க்க விரும்புகிறேன். கோவையில், உலகத்தரத்திலான கிரிக்கெட் மைதானம், அங்கு உள்ள விளையாட்டு ஆர்வலர்களின் ஆதரவோடு அமைக்கப்படும்.

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குறிப்பிட்டதைப் போல, சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தை அடுத்து, தமிழ்நாட்டின் இரண்டாவது பன்னாட்டு கிரிக்கெட் மைதானமாக இது விளங்கும். நமது திராவிட மாடல் அரசும், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அவர்களும் திறமையாளர்களை வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டின் விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

The post கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி appeared first on Dinakaran.

Related Stories: