அரசு ஊழியர்களைப் போல திருக்கோயில் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி 42%ல் இருந்து 46%ஆக உயர்வு..!!

சென்னை: அரசு ஊழியர்களைப் போல திருக்கோயில் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி 42%ல் இருந்து 46%ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கோயில் பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வை ஜூலை 1 முதல் கணக்கிட்டு வழங்க அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. ரூ.1லட்சம் அல்லது அதற்கு மேல் உதவித்தொகை வருமானம் வரும் கோயில்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உதவி வழங்கப்படும். கோயில் பகுதி நேர பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள், தொகுப்பூதிய பணியாளர்களுக்கு இது பொருந்தாது எனவும் அரசு தெரிவித்துள்ளது.

The post அரசு ஊழியர்களைப் போல திருக்கோயில் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி 42%ல் இருந்து 46%ஆக உயர்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: