சென்னை: மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவு
ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்” என்ற பெயரை “பூஜ்ய பாபு கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம்” என்று மாற்றுவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை உத்திரவாதம் என்று இருந்ததை வெறும் வேலைவாய்ப்பு என்று மாற்றுவதன் மூலம், இனி கிராமப்புற மக்கள் இதை உரிமையாக கோர முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. இந்தச் சிறந்த திட்டத்தை, ஒன்றிய பிஜேபி ஆட்சியில் 100 நாள் வேலை உத்திரவாதம் என்பது படிப்படியாகக் குறைக்கப்பட்டு 10 நாள், 20 நாள் என்ற நிலைக்கு வந்திருக்கிறது.
அடுத்த கட்டமாக, வேலை நாளே இருக்காது என்பதை அடையாளப்படுத்தும் விதமாகத்தான் \\”பூஜ்ய பாபு\\” என்று பெயரை மாற்றுகிறார்கள் போலும், பூஜ்யம் என்றால் மதிப்பில்லாதது பாபு என்பது வடமாநிலங்களில் மரியாதைக்குரிய வரை குறிப்பிடும் சொல்.
தேசத்தந்தை காந்தி என்றால் இந்த மத வெறி கூட்டத்திற்கு வெறுப்பு தான். எனவே, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் தந்திரம் தான் இந்த பெயர் மாற்றம்.கிராமப்புற மக்களின் சட்டப்படியான வேலை பெறும் உரிமையைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் இந்தக் குரூரமான செயலுக்கு எதிராக கண்டனம் முழங்குவீர். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
