ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி 43வது வார்டுக்கு உட்பட்ட குருப்பட்டியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில், 3 வகுப்பறை கட்டிடங்கள், ஒரு அங்கன்வாடி கட்டிடம் என 4 கட்டிடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தன. இந்நிலையில், ஓசூர்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை பணிக்காக, நெடுஞ்சாலைத்துறையினர், பொக்லைன் மூலம் இந்த கட்டிடங்களை இடிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கட்டிடத்திற்கு இடையில் நின்றிருந்த நெடுஞ்சாலை துறை ஒப்பந்த தொழிலாளி மீது சுவர் இடிந்து விழுந்தது. இதில், அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விசாரணையில் உயிரிழந்தவர் ஆந்திராவைச் சேர்ந்து சீனு(40) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
