சியாட்டில் இந்திய வம்சாவளி பெண் கார் மோதி கொல்லப்பட்ட விவகாரம்: சாதாரணமான பெண்தான், மதிப்பு இல்லாதவர் என அதிகாரி கேலி

வாஷிங்டன்: இந்திய வம்சாவளி இளம்பெண் அமெரிக்க போலீஸ் ரோந்து வாகனத்தால் மோதி கொல்லப்பட்ட விவகாரத்தில் விசாரணை அதிகாரிகள் மிக அலட்சியமாக சிரித்து கேலி செய்தது கேமரா காட்சி மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஜனவரி 23-ம் தேதி ஜான்வி கந்துல்லா என்ற 23 வயது இந்தியா வம்சாவளி மாணவி சியாட்டிலில் நடந்து சென்று கொண்டிருந்தபோது காவல் அதிகாரியான கெவின் டேவ் என்றவர் ஒட்டி சென்ற கார் பயங்கரமாக மோதியது.

இதில் 100 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட ஜான்வி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் விபத்து குறித்தும் ஜான்வி மரணம் குறித்தும் அதிகாரிகள் டேனியல், மைக்சோலன் கேலி செய்து பேசிய தொலைபேசி உரையாடல் டேனியலின் பாடி கேமராவிலேயே பதிவாகி உள்ளது. இறந்த பெண் ஒரு சாதாரணமானவர் தான் பெரும் மதிப்பு மிக்கவர் அல்ல என்றும் அவருக்கு 11,000 டாலர் காசோலையே போதும் என்று விசாரணை அதிகாரி டேனியல் பேசுவது கேமராவில் பதிவாகியுள்ளது.

மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டிய இடத்தில் 75 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று ஜான்வி மீது கெவின் டேவ் மோதினார். ஆனால், கெவின் வேகமாக சென்றதால் அவர் கட்டுப்பாட்டை மீறியவராக மாட்டார் விசாரணை அதிகாரி டேனியல் பேசுவதும் அதில் பதிவாகியுள்ளது. இதையடுத்து விசாரணை அதிகாரிகள் டேனியல், மைக்சோலன் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்க சியாட்டில் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

The post சியாட்டில் இந்திய வம்சாவளி பெண் கார் மோதி கொல்லப்பட்ட விவகாரம்: சாதாரணமான பெண்தான், மதிப்பு இல்லாதவர் என அதிகாரி கேலி appeared first on Dinakaran.

Related Stories: