சென்னை அருகே வங்கக்கடலில் இந்தியா – ஜப்பான் கடலோர காவல் படைகள் இணைந்து கூட்டுப்பயிற்சி..!!

சென்னை: சென்னை அருகே வங்கக்கடலில் இந்தியா – ஜப்பான் கடலோர காவல் படைகள் இணைந்து கூட்டுப்பயிற்சி மேற்கொண்டுள்ளது. சென்னைக்கு அருகே வங்கக்கடல் பரப்பில் இந்திய கடலோர காவல்படை மற்றும் ஜப்பான் கடலோர காவல்படையினர் இணைந்து இன்றைய தினம் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டது. இந்தியா – ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே கடந்த 2006ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த கூட்டுப்பயிற்சியானது, நிர்வாக ரீதியிலான மேம்படுத்துதல், தொழில்முறை ரீதியிலான கொள்கைகள் பரிமாற்றங்கள், தொழில்நுட்ப பரிமாற்றங்கள் மற்றும் கூட்டு பயிற்சி ஆகியவற்றிற்காக வருடா வருடம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கூட்டு பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பார்க்கும் போது, பயிற்சி பரிமாற்றங்கள், குறுகிய கால பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள், தொடர்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு இரு நாடுகள் இடையேயான கடலோர காவல்படையினர் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கூட்டு பயிற்சியில் பங்கேற்க ஜப்பான் கப்பல் ‘யாஷிமா சென்னை துறைமுகம் வந்தடைந்துள்ளது. இந்திய கடலோர காவல் படையின் 10 கப்பல்கள், ஜப்பானின் யாஷிமா கப்பல் கூட்டு பயிற்சியில் பங்கேற்றுள்ளது.

இன்றைய தினம் நடைபெற்ற கூட்டு பயிற்சியில், படகில் சிக்கியுள்ளவர்களை மீட்பது, மீட்பு படகுகள் எவ்வாறு இயக்கப்படுகின்றன, அதன் செயல்முறை விளக்கங்கள், நடுக்கடலில் படகுகள் தீ பிடித்தால் அவை எவ்வாறு அணைக்கப்படுகின்றன, விபத்தில் இருந்து எவ்வாறு பயணிகள் மீட்கப்படுகின்றனர், கடற்பரப்பில் எண்ணெய் படிமங்கள் எவ்வாறு அகற்றப்படுகின்றன? என்பது குறித்த விரிவான செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

குறிப்பாக ஹெலிகாப்டர் விமானங்கள் மூலமாக விபத்தில் சிக்கியவர்கள் எவ்வாறு மீட்கப்படுகின்றனர் என்பது குறித்த விரிவான செயல்முறை விளக்கத்தை இந்திய கடலோர காவல்படை மற்றும் ஜப்பான் கடலோர காவல்படை இணைந்து கூட்டு பயிற்சியின் மூலம் தத்ரூபமாக விளக்கி காட்டினர்.

The post சென்னை அருகே வங்கக்கடலில் இந்தியா – ஜப்பான் கடலோர காவல் படைகள் இணைந்து கூட்டுப்பயிற்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: