பாஜக மைனாரிட்டி அரசு ஆகிவிட்டது என்பதை அந்தக் கட்சியினர் இன்னும் உணரவில்லை: மஹுவா மொய்த்ரா பேச்சு

டெல்லி: இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு குடியரசுத் தலைவர் செங்கோலுடன் அழைத்து வரப்பட்டார். மன்னர் ஆட்சியின் அடையாளம்தான் செங்கோல் என்று திரிணாமுல் காங். எம்.பி. மஹுவா மொய்த்ரா பேசியுள்ளார். பாஜக மைனாரிட்டி அரசு ஆகிவிட்டது என்பதை அந்தக் கட்சியினர் இன்னும் உணரவில்லை. நீங்கள் மைனாரிட்டி ஆகிவிட்டீர்கள் என்பதை இன்னும் உணரவில்லை. நெருப்பாற்றில் நீந்தி வந்த எங்களை நீங்கள் எதுவும் செய்ய முடியாது.

2019-ல் நாடாளுமன்ற உறுப்பினராக முதன்முதலில் பேசியபோது சர்வாதிகாரத்தின் ஏழு குறியீடுகள் என்பதைப் பற்றி பேசினேன்.பெண்களைக் கண்டு பாஜக அச்சப்படுகிறது; அதனால்தான் மகளிர் இடஒதுக்கீட்டை நீங்கள் அமல்படுத்தவில்லை. தேர்தல் ஆணையத்தை மீறி எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன என்று மஹுவா மொய்த்ரா குற்றசாட்டியுள்ளார்.

ஆளும் கட்சியினரின் அத்துமீறல்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. கடவுள்களிடம் ஆணவத்துடன் நடந்து கொண்டால் தண்டிக்கப்படுவீர்கள் என்பதை பாஜகவுக்கு சொல்லிக் கொள்கிறேன். கடைசி முறை நான் இங்கு நின்றபோது பேச அனுமதிக்கப்படவில்லை. ஆனால் ஒரு எம்பியின் குரலை நசுக்கியதற்கு ஆளுங்கட்சி பெரும் விலை கொடுத்தது. என்னை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் 63 பாஜக உறுப்பினர்களை பொதுமக்கள் முடக்கிவிட்டனர்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹுவா மொய்த்ரா, நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியை (பாஜக) கடுமையாக விமர்சித்துள்ளார், அங்கு பாஜக 240 இடங்களை கைப்பற்றியது, பெரும்பான்மையை விட குறைந்துவிட்டது. மேற்கு வங்காளத்தில் உள்ள கிருஷ்ணாநகர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் மொய்த்ரா, மக்களவையில் பாஜக முன்பு அவரை மௌனமாக்க முயன்றபோது, ​​வாக்காளர்கள் இப்போது பாஜகவை அதன் தொகுதிகளை குறைத்து மௌனமாக்கியுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டினார்.

 

 

The post பாஜக மைனாரிட்டி அரசு ஆகிவிட்டது என்பதை அந்தக் கட்சியினர் இன்னும் உணரவில்லை: மஹுவா மொய்த்ரா பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: