ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை பெயரளவுக்கு குறைந்திருந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.9,230க்கும், பவுனுக்கு ரூ.40 குறைந்து ஒரு பவுன் ரூ.73,840க்கும் விற்பனையானது. அதே நேரத்தில் நேற்று வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.120க்கும், பார் வெள்ளி 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.73,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.9,155க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.120க்கு விற்பனையாகிறது.
The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ. 73,240க்கு விற்பனை!! appeared first on Dinakaran.
