சென்னை உள்ளிட்ட 7 விமான நிலையங்களில் புதிய திட்டம் விரைவில் தொடக்கம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: விமான நிலையங்களில் பயணிகள் வரிசையில் காத்திருக்கும் நேரத்தை குறைப்பதற்காக ஒன்றிய அரசு “விரைவான குடியேற்றம் – நம்பகமான பயணிகள் திட்டம்” (பாஸ்ட் டிராக் இமிக்ரேஷன் – டிரஸ்டட் டிராவலர் ப்ரோகிராம்) என்ற தொலைநோக்கு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது இந்திய குடிமக்கள் மற்றும் வௌிநாடு வாழ் இந்தியர்களுக்கு விரைவான, எளிதான மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக கடந்த ஜூன் 22ம் தேதி டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3வது முனையத்தில் இந்த திட்டம்தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை, கொச்சி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு மற்றும் அகமதாபாத் ஆகிய 7 முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் “விரைவான குடியேற்றம் – நம்பகமான பயணிகள் திட்டம்” கொண்டு வருவதற்கான பணிகளை ஒன்றிய உள்துறை அமைச்சகம் எடுத்து வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை உள்ளிட்ட 7 விமான நிலையங்களில் புதிய திட்டம் விரைவில் தொடக்கம்: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: