டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்


புதுடெல்லி: டெல்லி புதிய முதல்வராக அடிசி நாளை பதவி ஏற்கிறார். அவருடன் புதிதாக முகேஷ் அமைச்சராக பதவி ஏற்கிறார்.  டெல்லிபுதிய முதல்வராக அடிசி நாளை பதவி ஏற்க உள்ளார். கவர்னர் மாளிகையில் நடக்கும் பதவி ஏற்பு விழாவில் டெல்லி துணை நிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா, புதிய முதல்வர் அடிசி மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த கோபால்ராய், சவுரப்பரத்வாஜ், கைலாஷ் கெலாட், இம்ரான் உசேன் ஆகியோர் தொடர்ந்து அடிசி அமைச்சரவையிலும் இடம் பெற உள்ளனர்.

புதிதாக முகேஷ் அக்லாவாட் அமைச்சரவையில் இடம் பெற உள்ளதாக ஆம்ஆத்மி தெரிவித்துள்ளது. சமூக நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்த் ராஜினாமா செய்ததால் அந்த இடத்திற்கு சுல்தான்பூர் மஞ்ரா தொகுதி எம்எல்ஏ முகேஷ் புதிய அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பதவி ஏற்ற உடனேயே டெல்லி தலைமை செயலகத்திற்கு சென்று பொறுப்புகளை ஏற்றுக்ெகாள்வார்கள்.

The post டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர் appeared first on Dinakaran.

Related Stories: