இந்த நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் நடக்கும் பணிகளால் ரயில் ரத்து, பகுதியாக ரத்து, வழித்தட மாற்றங்கள் விவரம் குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் கூறியதாவது;
ஆக.15-ல் சென்னை – செங்கோட்டை பொதிகை (12661) ரயில் விழுப்புரத்துக்கு 30 நிமிடம் தாமதமாக செல்லும். ஆக.16 மற்றும் 17-ல் பொதிகை ரயில் (12661) விரைவு ரயில் சென்னைக்கு பதிலாக செங்கல்பட்டிலிருந்து செங்கோட்டைக்கு புறப்படும். ஆக.14 முதல் 17 வரை செங்கோட்டையிலிருந்து கிளம்பும் ரயில் செங்கல்பட்டு வரை மட்டுமே செல்லும். ஆக.16-ல் சென்னை – செங்கோட்டை (20681) சிலம்பு ரயில் விழுப்புரத்துக்கு 30 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும். ஆக.17-ல் சிலம்பு விரைவு ரயில் (20681) சென்னை செங்கோட்டை இடையே முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை – கொல்லம் விரைவு ரயில்: ஆக.15, 16 மற்றும் 17 தேதிகளில் சென்னையில் இருந்து புறப்பட்டு விழுப்புரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வரும். கொல்லம்-சென்னை விரைவு ரயில்: ஆக.17ம் தேதி கொல்லத்தில் இருந்து புறப்படும் ரயில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக சென்னை எழும்பூர் செல்லும். தாம்பரம் செல்லாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பயணிகள் கவனத்திற்கு.. சென்னை-செங்கோட்டை இடையே செல்லும் ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!! appeared first on Dinakaran.