செங்கல்பட்டு அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான நேர்காணல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக்கல்லூரியில் 2023-2024ஆம் ஆண்டு கல்லூரி படிப்பிற்கான மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் தமிழ், ஆங்கிலம், பிகாம், பி.ஏ, பிபிஏ என 15பாடப்பிரிவில் மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அனைத்து பாடப்பிரிவிற்கும் சேர்த்து மொத்தம் 1000 மாணவ, மாணவிகள்தான் இக்கல்லூரியில் பயில முடியும். இந்நிலையில், இதுவரை மொத்தம் 10 ஆயிரத்து 507 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் ஒவ்வொரு நாள் என நேர்காணல் நடைபெறும் நிலையில், நேற்று அறிவியல் பாடப்பிரிவிற்கான நேர்காணல் கல்லூரி முதல்வர் சிதம்பர வினாயகம் தலைமையில் நடைபெற்றது. அதனடிப்படையில் நேற்று‌ அறிவியல் பாடப்பிரிவிற்கான நேர்க்காணலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

The post செங்கல்பட்டு அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான நேர்காணல் appeared first on Dinakaran.

Related Stories: