சாத்தூர் அருகே சாலை விபத்தில் கணவர் கண் முன்னே மனைவி, 2 குழந்தைகள் உயிரிழப்பு..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சாலை விபத்தில் கணவர் கண் முன்னே மனைவி, 2 குழந்தைகள் உயிரிழந்தனர். நெல்லை திசையன்விளையில் இருந்து ரிச்சர்ட் ராஜா என்பவர் தனது மனைவி, 2 குழந்தைகளுடன் கோவை சென்றுகொண்டிருந்தார். சாத்தூர் அருகே நல்லிசத்திரம் என்ற இடத்தில் கார் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் ரிச்சர்ட் மனைவி மெர்லின், மகன் ரோகித் (13), மகள் ரோஷினி உயிரிழந்தனர்.

The post சாத்தூர் அருகே சாலை விபத்தில் கணவர் கண் முன்னே மனைவி, 2 குழந்தைகள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: