இந்த நிலையில்,சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் 2027ம் ஆண்டு மார்ச் முதல் தொடங்கும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ளது.லடாக், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் இந்த ஆண்டே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சாதிவாரி கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள பணியில் 34 லட்சத்திற்கு மேற்பட்டோர் பயன்படுத்தப்பட உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பனி சூழ்ந்த மலைப் பிரதேசம் தவிர்த்த பிற மாநிலங்களில் மார்ச் 1 முதல் கணக்கெடுப்பு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1931ம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி 4,147 சாதிகள் இருந்ததாக புள்ளி விவரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும். தற்போது வரை 1931ம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி இட ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது என உள்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ளது. 2011ம் ஆண்டில் சமூக பொருளாதார ரீதியில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் புள்ளி விவரங்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post 2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஒன்றிய அரசு..!! appeared first on Dinakaran.
