மேலும், ஒரு நபர், அமைப்பு அல்லது சாதி தூண்டிவிட்டது என்று குற்றம்சாட்ட மாட்டேன். ஆனால் மாணவர்கள் இடையே இதுபோன்ற மோதல் உருவாக, சமூக சூழல் தான் காரணம். சுயசாதி பெருமை பேசுகிறேன் என்ற பெயரில், வேற்று சாதியை வெறுக்கும் சூழல் ஏற்படுவதை உற்று நோக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு சார்பில் அவர்களுக்கு நல்ல வீடு, பிள்ளைகளை பாதுகாப்பாக படிக்க வைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆண்டுதோறும் 40 பேர் படுகொலை செய்யப்படுவதாக வேதனை தெரிவித்த திருமாவளவன் நாங்குநேரி, வள்ளியூர் பகுதிகளை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றார்.
The post சாதிய, மதவாத வன்முறைகளைத் தடுக்க காவல் துறையில் தனி பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை appeared first on Dinakaran.
