நன்றி குங்குமம் தோழி
பாரம்பரிய அரிசிகளில் மருத்துவ குணம் அதிகம் உடைய அரிசி கருங்குருவை. இது ஒரு அரிய வகை அரிசி என்றாலும், நம் முன்னோர்களால் மாமருந்தாக கருதப்பட்ட இந்த அரிசியில் உள்ள மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ளலாம்.
*கருங்குருவை அரிசி சிவப்பு நிறத்தில் இருந்தாலும் கருப்பு அரிசி வகையை சேர்ந்தது. இது பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
*120 – 125 நாட்களில் அறுவடை செய்யப்படும் இந்த கருங்குருவை அரிசி இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் பயிரிடப்பட்டு வருகிறது. வருடத்தில் டிசம்பர் – ஜனவரி மற்றும் ஜூன் – ஜூலை ஆகிய மாதங்களில் கருங்குருவை பயிரிடப்படுகிறது.
*கருங்குருவையின் நெல் மணிகள் ஒரு ஆண்டு முழுவதும் மக்கிப் போகாமல் பிறகு முளைக்கும் திறன் உடையது. இதன் நெல் தானிய மணிகள் கருப்பாகவும் அரிசி சிவப்பாகவும் காணப்படும்.
*இதில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, பி, பி12, கே, இ, புரதச்சத்து என இவை அனைத்தும் நிறைந்துள்ளது.
*சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் இந்த அரிசியை உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பயன்படுகிறது.
*வயதில் சிறியவர்களாக இருப்பார்கள்.ஆனால் பார்ப்பதற்கு மிகவும் வயதில் பெரியவர்கள் போல் அவர்களின் தோற்றம் பிரதிபலிக்கும். இதை சரி செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது கருங்குருவை அரிசி. இதனை உணவில் எடுத்துக் கொள்ளும்போது வயதான தோற்றத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.
*கருங்குருவை அரிசியில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் புற்றுநோய் செல்களை வளராமல் தடுக்க உதவுகிறது.
*மலச்சிக்கலை போக்கும், ரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வை கொடுக்கும்.
*உடலில் தேங்கியுள்ள கொழுப்பை கரைக்கும்.
*பித்தம் சம்பந்தமான பிரச்னைகளை சரி செய்யும்.
*கூந்தல் ஆரோக்கியமாக வளர உதவுகிறது.
*நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.
*கருங்குருவை அரிசியில் இட்லி, தோசை, ஆப்பம், புட்டு, இடியாப்பம் மற்றும் கஞ்சி போன்ற அனைத்து வகை உணவுகளை தயார் செய்யலாம். கருங்குருவை அரிசியை அன்றாட உணவாக எடுத்துக் கொண்டு பல நோய்களில் இருந்தும் விடுபடலாம்
– ஏ.ஏஸ்.கோவிந்தராஜன், சென்னை.
The post கருங்குருவை அரிசி appeared first on Dinakaran.