பிரம்மோஸ் ஏவுகணை தாக்குதல் அணுஆயுத போராக மாறியிருக்கும்: பாக். பிரதமரின் ஆலோசகர் தகவல்

இஸ்லாமாபாத்: பிரம்மோஸ் ஏவுகணை தாக்குதல் பதிலடி அணு ஆயுத போராக மாறியிருக்கலாம் என்ற பாக். பிரதமரின் ஆலோசகர் ராணா சனாவுல்லா தெரிவித்தார். காஷ்மீர் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்றதற்கு பதிலடியாக ஆபரேஷன்சிந்தூர் மூலம் இந்தியா தாக்குதல் நடத்தியதால் 4 நாள் போர் வெடித்தது. அப்போது பிரமோஸ் ஏவுகணை மூலம் இந்தியா தாக்குதல் நடத்தியதால் உடனே போரை நிறுத்த பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தியது. போரும் முடிவுக்கு வந்தது. இந்த சூழலில் போர் அணுஆயுத போராக மாறியிருக்கும் என்று பாக். பிரதமரின் ஆலோசகர் ராணா சனாவுல்லா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘பாகிஸ்தானின் நூர் கான் விமானப்படை தளத்தில் இந்தியா பிரம்மோஸை ஏவியபோது, ​​வரும் ஏவுகணையில் அணு ஆயுதம் இருக்குமா என்பதை ஆய்வு செய்ய பாகிஸ்தான் ராணுவத்திற்கு 30-45 வினாடிகள் மட்டுமே இருந்தது. இது குறித்து 30 வினாடிகளுக்குள் முடிவு செய்வது ஆபத்தான சூழ்நிலை. ஏனெனில் இந்த போர் அணு ஆயுத போராக வெடித்து இருக்கும். அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இருந்ததன் மூலம் இந்தியா நல்லதை செய்தது என்று நான் கூறவில்லை. ஆனால் அதே நேரத்தில் பாகிஸ்தான் பக்கத்தில் உள்ளவர்கள் அதைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம். இது உலகளாவிய அணு ஆயுதப் போரைத் தூண்டக்கூடிய முதல் அணு ஆயுதத்தை ஏவுவதற்கு வழிவகுத்திருக்கலாம்’ என்றார்.

The post பிரம்மோஸ் ஏவுகணை தாக்குதல் அணுஆயுத போராக மாறியிருக்கும்: பாக். பிரதமரின் ஆலோசகர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: