பாஜவினர் ராமரின் உண்மையான சீடர்கள் இல்லை ராமரின் பெயரால் மோடி மக்களை ஏமாற்றி விட்டார்: சமாஜ்வாடி எம்.பி. கடும் தாக்கு

லக்னோ: மோடி ராமரின் பெயரில் அரசியல் செய்து மக்களை ஏமாற்றி விட்டதாக சமாஜ்வாடி கடுமையாக சாடி உள்ளது. மக்களவை தேர்தலில் ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் தொகுதியில் பாஜ வேட்பாளராக லல்லு சிங் போட்டியிட்டார். அவரை எதிர்த்துகளம் இறங்கிய சமாஜ்வாடி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் 54,567 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் ஃபசாபாத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவதேஷ் பிரசாத், “தேர்தல் பிரசாரங்களில் பாஜ தலைவர்கள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டிய பெருமையை மோடிக்கு தந்தனர். பா.ஜவினர் ரமரின் உண்மையான சீடர்கள் இல்லை. ராமர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டார். ராமரை பாஜவினர் அழைத்து வந்ததாக அவர்கள்((பாஜ) சொன்னது தவறான முழக்கம். பாஜ ராமரின் பெயரில் அரசியல் செய்து நாட்டு மக்களை ஏமாற்றியது. இதனை நன்றாக புரிந்து கொண்ட மக்கள் பாஜவுக்கு தோல்வியை தந்துள்ளனர்” என்று கூறினார்.

The post பாஜவினர் ராமரின் உண்மையான சீடர்கள் இல்லை ராமரின் பெயரால் மோடி மக்களை ஏமாற்றி விட்டார்: சமாஜ்வாடி எம்.பி. கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: