காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பிறந்தநாளையொட்டி தொலைபேசி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கடினமான காலங்களில், மதச்சார்பற்ற கூட்டணிக்காக ஒருமித்த கருத்தைக் கொண்ட கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் உங்கள் தலைமைத்துவம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. உங்கள் பரந்த அனுபவமும், நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பும் எங்கள் அனைவரையும் ஊக்குவிக்கிறது. வலிமையான இந்தியா-வை உருவாக்குவதற்கான உங்கள் முயற்சிகள், நமது மகத்தான தேசத்தை வடிவமைத்த மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கான சிந்தனைகளுடன் நம்மை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: