ஆனால், தற்போது 300 முதல் 350 இலை கட்டுகள் மட்டுமே வந்துள்ளது. அதுமட்டுமின்றி இன்று முதல் ஆவணி மதம் பிறப்பு மற்றும் நாளை முதல் முகூர்த்த நாள் தொடங்குவதால் வாழையிலையின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. சிறிய வாழையிலை கட்டுகள் பொதுவாக ரூ.1000 முதல் ரூ.1,500 வரை விற்பனையாவது வழக்கம். ஆனால், தற்போது ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை விற்பனையாகிறது. பெரிய வாழையிலை கட்டு ரூ.3,000 முதல் ரூ.3,500 வரை விற்பனையான நிலையில், தற்போது ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை விற்பனையாகி வருகிறது. இந்த விலை உயர்வால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post வரலாறு காணாத அளவில் வாழையிலை விலை உயர்வு: ஆவணி மாத சுபமுகூர்த்த நாட்கள் வரவுள்ளதால் கட்டு ரூ.7000 வரை விற்பனை appeared first on Dinakaran.
