ஆடி கிருத்திகையையொட்டி; திருச்செந்தூர் கோயிலில் நாளை சிறப்பு வழிபாடு

திருச்செந்தூர்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் திரளானோர் வருகை தந்து தரிசித்து செல்கின்றனர். விழா காலங்களிலும், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் பன்மடங்கு அதிகரிக்கும். தமிழ் மாதத்தைப் பொருத்தவரையில் ஆடி கிருத்திகை என்பது முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்தது. இந்நாளில் முருகப்பெருமானை புனித விரதம் இருந்து வழிபட்டால் சிறப்பு என்பதால் அனைத்து முருகன் கோயிலிலும் ஆடி கிருத்திகை மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக கொண்டாடப்படுகிறது.

இந்தாண்டுக்கான ஆடி கிருத்திகை நட்சத்திரம் இன்று (29ம் தேதி) திங்கட்கிழமை பிற்பகல் 2.38 மணிக்கு தொடங்கி நாளை மதியம் 1.38 மணி வரை உள்ளது. இதை முன்னிட்டு மற்ற கோயில்களில் இன்று (29ம் தேதி) ஆடி கிருத்திகை கொண்டாடப்படும் நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மட்டும் நாளை (30ம் தேதி) தான் ஆடி கிருத்திகை வைபவம் நடைபெறுகிறது. இதையொட்டி முருகப்பெருமானுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனைகளும் நடைபெறும். ஆனாலும், இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

 

The post ஆடி கிருத்திகையையொட்டி; திருச்செந்தூர் கோயிலில் நாளை சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: