புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே சதீஷ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மது ஒழிப்பு மாநாடு என்பது திருமாவளவன் கட்சியின் மாநாடு, முதலில் தேமுதிகவிற்கு அழைப்பு விடுக்கட்டும் அதன் பிறகு பார்க்கலாம். ஏற்கனவே பாஜ கூட்டணி ஆட்சி குறித்து பேசி உள்ளது. தற்போது திருமாவளவனும் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2016ம் ஆண்டு மக்கள் நல கூட்டணி தொடங்கிய போது, கூட்டணி ஆட்சி குறித்து நாங்கள் வலியுறுத்தி இருந்தோம், முடிவும் செய்திருந்தோம். 2026ம் ஆண்டு தேர்தல் முடிவுக்கு பிறகு நாங்கள் பேசுவோம். 2026ல் கூட்டணி ஆட்சி வந்தால் எங்களுக்கு நல்லது தான்.கோவையில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்திய கூட்டத்தில் ஜிஎஸ்டி குறித்து அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் கூறியுள்ளது முற்றிலும் சரிதான். நடிகர் விஜய் மாநாடு நடத்தட்டும், கொள்கைகளை அறிவிக்கட்டும், அதன் பிறகு பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
The post விசிக மாநாட்டில் பங்கேற்பா? எல்.கே.சுதீஷ் பதில் appeared first on Dinakaran.