தமிழ்நாட்டில் மோடி பலரை களத்தில் இறக்கினாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திமுக, காங்கிரஸ் ஒன்று சேர்ந்து மோடி ஆட்சிக்கு முடிவு கட்டும் பணியை மேற்கொள்வோம். சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து பாஜ அரசு பழிவாங்கும் நோக்கோடு செயல்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் கலவரத்தை ஏற்படுத்த முடியாதா?, குழப்பத்தை ஏற்படுத்த முடியாதா என பலர் ஏங்கி வருகின்றனர்.
திருமாவளவன் பேட்டி கொடுத்தால் அணி மாறுகிறார் என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினால் கூட்டணியில் குழப்பம் என பேசி வரும் எடப்பாடி, நாங்கள் வருகின்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்போம் என கூறுகிறார். முதலில் அவருடைய கட்சி வலுவான கட்சியாக இருக்கிறதா என பார்க்க வேண்டும். உங்களிடம் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, ஓபிஎஸ், தினகரன் உள்ளிட்டவர்களை ஒன்றாக சேர்க்க முடியாதவர்கள் வலுவான கூட்டணியை எப்படி அமைக்க முடியும். பாஜவுக்கு எதிராக நாங்கள் ஒன்றாக சேர்ந்துள்ளோம். எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. மக்கள் பிரச்னைக்காக குரல் கொடுக்கும் இயக்கமாக இருப்போம். அதே நேரத்தில் தமிழ்நாட்டில் பாஜவை நுழைய விட மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.
The post முதல்ல உங்க கட்சி ஸ்டிராங்கா இருக்கா? அப்புறம் ஸ்டிராங்க் கூட்டணி பார்க்கலாம்… எடப்பாடியை கலாய்த்த பாலகிருஷ்ணன் appeared first on Dinakaran.